ஒன்னும் கிழிக்க வேண்டாம்!! அந்த விசயத்தில் சிவகார்த்திகேயனை மிரட்டிய தாய்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றும் மக்கள் மத்தியில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்தும் வந்தவர் நடிகை சிவகார்த்திகேயன். 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன், மாவீரன் படத்திற்கு பின் அயலான் படம் பொங்கல் வெற்றிக்காக காத்திருக்கிறார்.
கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இடையில் இமான் பிரச்சனையிலும் சிக்கி பேசுபொருளாக மாறினார். அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் குடும்பம் மற்றும் படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் அந்நேரத்தில் திருமணம் செய்து கொண்ட தன் மனைவி ஆர்த்தியுடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசிய ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நமக்கு இப்போது தான் 21, 22 வயது ஆகிறது, காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று இருந்தேன்.

திருமணத்திற்கு முன்பே தொகுப்பாளினியுடன் இரண்டு வருடம் டேட்டிங்!! கைதி நடிகர் நரேன் மனைவி ஓப்பன் டாக்..
ஆனால், அதெல்லாம் நீ ஒன்னும் பண்ணி கிழிக்க வேண்டாம், உன் மாமன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க என்று அவரது அம்மா சொல்லிட்டாங்க என்று காமெடியாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
cute pair sivakarthikeyan Aarthi ?? pic.twitter.com/aqIDGSOPt3
— LEO ? வெற்றி (@Vetri_Maaraan) December 23, 2023