சந்தானம் டயலாக்கை அப்படியே காப்பி அடித்த சிவகார்த்திகேயன்.. என்ன அறிவு இதெல்லாம்..

Santhanam Sivakarthikeyan Prince (2022)
By Jai Oct 15, 2022 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராகவும் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ் தீபாவளி

டாக்டர், டான் உள்ளிட்ட 100 கோடி வசூல் படங்களை அடுத்து மாவீரன், பிரின்ஸ், அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் பிம்பிளிக்கி பிளாப்பி, ஜெசிக்கா போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அப்படத்தின் Who Am I ? என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சந்தானம் டயலாக் காப்பி

பாடகர் மற்றும் பாடலாசிரியராக திகழ்ந்து வரும் அறிவு இப்பாடலுக்கு வரிகளை எழுதி கொடுத்துள்ளார். இப்பாடலில் வரும் நான் யாரு, Who Am I, நேன் எவ்ரு, யான் ஆரா என்ற வார்த்தை சந்தானம் ஒரு படத்தில் பைத்தியம் போல் நடித்து அப்போது சொல்லும் டயலாக்கை அப்படி அறிவு காப்பி அடித்து இதில் போட்டுள்ளார். இதனை வீடியோ எடிட் செய்து மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.