இந்தியன் 2 கதையை கேட்டு நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அந்த நடிகர் யார் தெரியுமா?

Kamal Haasan Siddharth Sivakarthikeyan Shankar Shanmugam Indian 2
By Dhiviyarajan Aug 11, 2024 10:00 AM GMT
Report

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தப் படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம் எனவும் ரசிகர்கள ஓபனாக பேச ஆரம்பித்தனர். அண்மையில் இந்தியன் 2வில் ஓடிடியில் வெளியானது.

தற்போது நடிகர் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் ஆகியோரை ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர். முக்கியமாக படத்தில் இடம் பெற்றுள்ள, "சித்ரா அரவிந்தன் சோஷியல் மீடியா, GO Back Indian" காட்சிகளை கட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்தார்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். ஆனால் சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டார். நல்ல வேல சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை, தப்பிச்சிட்டாரு என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இந்தியன் 2 கதையை கேட்டு நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அந்த நடிகர் யார் தெரியுமா? | Sivakarthikeyan Rejected Indian 2 Movie