நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்..

Sivakarthikeyan Gossip Today Soori
By Edward Aug 13, 2024 10:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எஸ்கே புரொடக்ஷன் தயாரிப்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்தவகையில் விடுதலை, கருடன் உள்ளிட படங்களில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வரும் நடிகர் சூரியை வைத்து கொட்டுக்காளி என்ற படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்.. | Sivakarthikeyan Speech About Soori Act Kottukaali

இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்தது போக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்த படத்திற்கு முன்பணமாக கொடுத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற 2 இயக்குநர்களுக்கு பட முன்பணமாக கொடுத்து இருப்பேன். எனக்கு வாழ்க்கையை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதை பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்.. | Sivakarthikeyan Speech About Soori Act Kottukaali

மேலும், நான் யாரையும் கண்டுப்பிடித்து, உங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று அப்படி என்னை சொல்லிசொல்லி பழக்கிவிட்டார்கள். அந்தமாதிரியான ஆள் நானில்லை.

எனக்கு இது ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற வேலை தான். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இந்த நிலையில் இருந்து தயாரிப்பாளராக, சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இது வெற்றியடைந்தால் தொடரும் என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.