சுதா கொங்கராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனையா!! தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி..
சுதா கொங்கராவின் புறநானூறு
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ், சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். முருகதாஸ் படத்திற்காக புது கெட்டப்பில் தாடியும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். டான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் இப்படத்தினை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி, அதர்வா, நடிகை ஸ்ரீலீலா போன்றவர்கள் கமிட்டாகி இருக்கிறார்கள்.
இப்படத்தின் லுக் டெஸ்ட்டுக்கான புகைப்பட ஷூட்டிங் மற்றும் திரைப்பட அறிமுகக் காணொலி ஒன்றினை உருவாக சுதா கொங்கரா திட்டமிட்டிருந்தார். அதற்கான ஷூட்டிங்கினை ஜெயம் ரவி முடித்திருக்கிறார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு அவரை அணுகியிருக்கிறார்கள்.
கோபத்தில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனும் ஷூட்டிங் இடத்திற்கு சென்றுள்ளார். தாடி அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் குறையுங்கள் என்று சுதா கொங்கரா கூறியிருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்து இப்போது இருக்கிறபடியே இருங்கள், அதை வைத்தே படப்பிடிப்பை நடத்திக்கொள்கிறேன் என்று சுதா கொங்கரா சொன்னதால் தானே அப்படியே வந்தேன், இப்போது குறையுங்கள் என்றால் எப்படி என்று கூறி தாடியை குறைக்க மறுத்துவிட்டாராம்.
இதனால் கடுப்பாகிய சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் இருக்கும் போதே அவரை மட்டும் விட்டுவிட்டு அங்கிருந்தவர்களை ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சகட்டு மேனிக்கு திட்ட துவங்கியிருக்கிறார். அதில் எழுத முடியாத வார்த்தைகளை கொண்டு திட்டியிருக்கிறார்.
மேலும் சிவகார்த்திகேயன் காதுபட, பருத்திவீரன் கார்த்தி மாதிரி இவ்வளவு தாடியோ இருந்தால் எப்படி என்றும் சுதா கொங்கரா சொல்லிவிட்டாராம். இதனால் கோபடமடைந்த சிவகார்த்திகேயன் உடனே அங்கிருந்து சொல்லாமல் புறப்பட்டு சென்றிருக்கிறார். அவர் போனது தெரியாமல் ஒளியமைப்பு நடந்து கொண்டிருந்தது. அதை முடித்துவிட்டு அவர் எங்கே? என்று தேடியபோது கிளம்பியது தெரிந்துள்ளது.
பேச்சுவார்த்தை
அதனால் அந்த படப்பிடிப்பு இரத்தாகி அதன் விளைவு, இந்நேரம் வெளியாகியிருக்க வேண்டிய அந்தப்படத்தின் அறிவிப்பும் நடக்காமல் போயிருக்கிறது. அதன்பின் சுதா கொங்கராவின் அழைப்பை சிவகார்த்திகேயன் ஏற்கவில்ல்லையாம். படத்தின் திரைக்கதை படிக்கும் ஸ்கிரிப்ட் ரீடிங் நிகழ்வுக்கு கூட அவரை அழைத்தும் வருவேன் வரமாட்டேன் என்றுகூட எதுவும் சொல்லவில்லையாம்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு தயாரிப்பாளரை சமரசம் செய்ய சுதா கொங்கரா அழைக்க, அவரும் என்னால் முடியாது என்று பின் வாங்கி இருக்கிறாராம். இப்போது படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷிடம் இந்த தகவல் கூறப்பட்டு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் சிக்கல் சரியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர் ஒரு பதிவினை பகிர்ந்து பதிலடி கொடுத்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் எக்ஸ் தள பக்கத்தில் பருத்திவீரன் படத்தில் கார்த்தி கொடுக்கும் ரியாக்ஷனை பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Aakash baskaran (@AakashBaskaran) December 3, 2024