ஐஸ்வர்யா - தனுஷ் குடும்ப பிரச்சனை நமக்கு எதுக்கு! SK கொடுத்த ரியாக்ஷன்..

Dhanush Sivakarthikeyan Aishwarya Rajinikanth Gossip Today
By Edward Mar 08, 2025 05:45 PM GMT
Report

ஐஸ்வர்யா - தனுஷ்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறிய 3 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு சட்டரீதியாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பின் தன்னுடைய  மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.

இருவரின் கருத்து வேறுபாடுகளுக்கு என்ன தான் காரணம் என்று பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர் இவர்களின் விவாகரத்து விவகாரம் ரஜின்காந்திற்கு உச்சக்கட்ட மன வேதனையை கொடுத்ததாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஐஸ்வர்யா - தனுஷ் குடும்ப பிரச்சனை நமக்கு எதுக்கு! SK கொடுத்த ரியாக்ஷன்.. | Sivakarthikeyan Throwback About Dhanush Aishwarya

சிவகார்த்திகேயன்

இந்நிலையில் இவர்கள் இருவர் பற்றியும் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று டிரெண்ட்டாகி வருகிறது. 3 பட சமயத்த்ல் தனுஷ், ஐஸ்வர்யா, கலந்து கொண்ட பேட்டியொன்றில், சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். அப்போது தனுஷ், காதல் கொண்டேன் ட்ரெய்லர் பார்த்தபோதே என்னிடம் ஐஸ்வர்யா விழுந்துவிட்டார்.

நீங்கள் எல்லாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் அவரை (ஐஸ்வர்யா)தேடி போகவில்லை அவர்தான் என்னைத்தேடி வந்தார் என்று கூறினார். அதற்கு ஐஸ்வர்யா சிவகார்த்திகேயனை பார்த்து, இப்போது இதற்கு நீங்கள் என்ன கவுண்ட்டர் கொடுக்கப்போகிறீர்கள் என்று நான் கேட்டேயாகணும் என்று  கூறியிருக்கிறார்.

உடனே பதறிய சிவகார்த்திகேயன் ஆடியன்ஸை பார்த்து, நாமெல்லாம் பேசிக்கொண்டு இருப்போம், அவங்க குடும்ப பிரச்சனை நமக்கு எதுக்கு பாஸ் என்று காமெடியாக ஜாலியாக கூறியிருக்கிறார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.