பயமா இருக்குன்னேனு சொன்ன SK..சூரியால் மிரண்டுபோன சிவகார்த்திகேயன் மனைவி...
Sivakarthikeyan
Soori
Kottukkaali
By Jai
கொட்டுக்காளி
விடுதலை, கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சூரி, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மலையாள நடிகை அன்னா பென் முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது கொடுக்காளி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், அண்ணே என்னண்ணே பண்ணி வெச்சிருக்கீங்க, பயமாக இருக்கிறது என்றும் உங்கள் நடிப்பை பார்த்து என் அம்மாவும் மனைவியும் மிரண்டுவிட்டதாகவும் கூறியதாக சூரி தெரிவித்திருந்தார்.
மேலும் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி, சூரியிடம் வேற மாதிரி நடிச்சிருக்கீங்களேண்ணா, படம் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க என்று சூரி தெரிவித்துள்ளார்..