கடன் பிரச்சனையால் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அடைக்க புது ஸ்கெட்ச் போடும் நிலை?

Sivakarthikeyan Aditi Shankar Maaveeran
By Edward Sep 13, 2022 10:09 AM GMT
Report

மாவீரன் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் தன் திறமையால் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் போன்ற 100 கோடி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், பிரன்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.

பிரன்ஸ் கூடிய சீக்கிரமே வெளியாகவுள்ள நிலையில் மாவீரன் படத்தின் பூஜையும் ஆரம்பித்து சில பிரான்சியல் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

கடன் பிரச்சனையால் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அடைக்க புது ஸ்கெட்ச் போடும் நிலை? | Sivakarthikeyans Maaveeran Movie Shooting Stopped

பிளாஃப் படங்களால் கடன்

இதற்கு காரணம் சீமராஜா, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் தோல்வியால் தற்போது வரை 76 கோடி அளவில் கடன் பிரச்சனையில் தவித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

இந்த கடன்களை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று தான் தன் சம்பளத்தஇ 25 கோடிக்கும் மேல் வாங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

கடனை அடைக்க முடியாமல் தவிப்பதால் தான் மாவீரன் படப்பிடிப்பு தள்ளிச்சென்றுள்ளதாம். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடனை அடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் மாவீரன் ஷூட்டிங்கை சிவகார்த்திகேயன் ஆரம்பித்துவிட்டாராம்.