கர்ப்பமாக இருந்த சுஜா வருணி.. எதிர்பாராமல் கலைந்துபோன கரு.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
விஜய் டிவியில் நடந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிவக்குமார் மற்றும் சுஜா வருணி. போட்டியில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் பிபி ஜோடிகள் டைட்டிலையும் தட்டி சென்றனர்.
இந்நிலையில், சுஜா வருணி மற்றும் அவரது கணவர் சிவகுமாரும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்கள். அதில், பேய்-கடவுள் ரவுண்டில் நடனமாடிய சுஜா கீழே விழுந்துவிட்டார். அப்போது அவரை அறியாமலேயே யூரின் போய்விட்டார். பிறகே தான் தெரியவந்தது சுஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று.
மருத்துவர் இரண்டாவது முறை சுஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார்கள். என் சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடி வந்தார்.
ஒரு சமயத்தில் சுஜாவிற்கு பீலிடிங் ஆக துவங்கியது, அப்போது மருத்துவரிடம் கேட்டபோது குழந்தை மிஸ்கரேஜ் ஆகிவிட்டது என்றனர். நான் அதிர்ச்சியில் மனமுடைத்துப்போய் விட்டேன் என்று சோகத்துடன் இதை பேட்டியில் பகிர்ந்துகொண்டார் சிவகுமார்.