சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு தடையாக இருந்தது தந்தை? சிவக்குமார் கூறிய சிக்கல் இதுதான்...

Karthi Sivakumar Suriya Jyothika
By Edward Jun 24, 2022 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். பல நூறு படங்களில் நடித்த சிவக்குமார் நேருக்கு நேர் படத்தின் மூலம் மூத்த மகன் சூர்யாவை திரையில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் படங்களில் நடித்து வந்த சூர்யா பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். வாலி படத்தில் தான் நடிகை ஜோதிகா நடிகையாக அறிமுகமாகினார்.

சூர்யா - ஜோதிகா காதல்

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு பிறகு உயிரிலே கலந்து, காக்க காக்க, மாயாவி, பிதாமகன் போன்ற படங்களில் ஜோதிகாவுடன் நடித்து வந்தார். சில்லு ஒரு காதல் படத்திற்கு பிறகு 2006ல் ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். பிரண்ட் படத்தின் போது கூட இருவரும் 4 வருடங்களாக ஆரம்பத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு தடையாக இருந்தது தந்தை? சிவக்குமார் கூறிய சிக்கல் இதுதான்... | Sivakumar Explaint Surya Jyothika Love Issues

தடையாக இருந்தா சிவக்குமார்

காதல் விவகாரத்தில் சூர்யா தந்தை சிவக்குமார் இடைஞ்சலாக இருப்பதாக செய்திகள் பரவியது. அப்போது தமிழே பேசத்தெரியாத ஜோதிகா பிடிக்காத காரணத்தால் தான் சிவக்குமார் ஒதுக்கி வைத்தார் என்றும் பின் சூர்யா - ஜோதிகா காதலுக்காக பல வருடங்கள் காத்திருக்கிறோம் என்று கூறி வந்துள்ளார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு தடையாக இருந்தது தந்தை? சிவக்குமார் கூறிய சிக்கல் இதுதான்... | Sivakumar Explaint Surya Jyothika Love Issues

இதுதான் உண்மை

இயக்குனர் சித்ரா லட்சுமனனுக்கு அளித்த பேட்டியில் சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு தடையாக சிவக்குமார் இருந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா, பெருந்தன்மையாக தான் நீங்கள் சம்மதித்திர்களா? என்று சிவக்குமாரிடம் சித்ரா கேட்டுள்ளார்.

அதற்கு சிவக்குமார், நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோ, 150 படத்தில் நான் காதல் படங்களில் நடித்திருக்கிறேன். அப்படி காதல் வசனங்கள் எல்லாம் பேசிட்டு, ஒரே பெண்ணை காதலிச்சுட்டு வேண்டாம்னு சொன்னா எப்படின்னு நான் மெளனம் காத்தேன். இதற்காக காத்திருந்தார் இருவரும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது.