காதல் திருமணம் செய்த சூர்யா..நீயாவது உங்க ஜாதில பாருன்னு சொன்ன ஜெயலலிதா!! சிவகுமார் ஓபன்..
காதல் திருமணம் - சூர்யா
தமிழ் சினிமாவில் 70களில் டாப் நடிகராக திகழ்ந்து 90களில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மிகப்பெரிய கலைஞராக திகழ்ந்தவர் தான் நடிக சிவகுமார். தன்னுடைய இரு மகன்களான சூர்யா, கார்த்தியை என இருவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய உயரத்தில் இருப்பதை பெருமையாக பார்த்து வருகிறார்.

ஆரம்பத்தில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலிப்பது பிடிக்காமல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பின் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். அதன்பின் தன்னுடைய இரண்டாம் மகன் கார்த்தியை காதலிக்கவிடாமல், சொந்தத்திலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
சிவகுமார்
சமீபத்தில் சிவகுமார் அளித்த பேட்டியில், சூர்யா கல்யாணத்திற்காக, என் மனைவி, கார்த்தியும் ஜெயலலிதா அம்மாவுக்கு பத்திரிக்கை வைக்க சென்றோம்.

அப்போது அம்மா சொன்னாங்க, வீட்டில் ஒரு லவ் மேரேஜ், ஓகே, அத ஒன்னும் பண்ண முடியாது, நீயாவது உங்க அப்பாவை சந்தோஷப்படுத்துற மாதிரி உங்க ஜாதில பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கடா என்று கார்த்தியிடம் சொன்னாங்க.
அத சொல்ல வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன, பெத்தா தான் தாயா? அதுனால தான் உலகமே அவங்கள அம்மான்னு சொல்லுது என்று சிவகுமார் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.