தலைக்கேறிய போதையால் மட்டையாகிய இயக்குனர்!! சிவக்குமார் எடுத்த அதிரடி முடிவு..
தமிழ் சினிமாவில் 70, 80 காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சிவக்குமார். சினிமாவில் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்து வந்த சிவக்குமார் சீரியலில் சில ஆண்டுகளுக்கு முன் நடித்து வந்தார்.
சிலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சீரியலையும் ஒதுக்கி நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். சிவக்குமார், அப்போதில் இருந்து இப்போது வரையில் சரியான நேரத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர்.

அப்படி ஒரு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் காலை சூரிய உதயத்தை படமாக்கும் காட்சியை எடுக்கவிருந்தனர். இதற்காக படக்குழுவினரும் சிவக்குமாரும் சீக்கிரமாகவே ஷூட்டிங் தளத்திற்கு வந்துவிட்டார்.
ஆனால், படத்தின் இயக்குனர் நேரமாகியும் வராமல் இருந்துள்ளார். இயக்குனரை தேடி சென்ற போது, இரவு அடித்த மதுவால் தலையேறிய போதையில் தூக்கிக்கொண்டிருந்தார்.
இதையறிந்த சிவக்குமார் சமயோசிதமாக யோசித்து உடனே உதவி இயக்குனரை அழைத்துக்கொண்டு சூர்ய உதய காட்சியை எடுத்து முடித்துவிட்டாராம். இதன்பின் இயக்குனர் சிவக்குமாரிடம் நன்றியோடு மன்னிப்பு கேட்டும் இருந்திருக்கிறார்.