சூர்யா - ஜோதிகா திருமணத்தை தடுக்க நினைத்தேனா?..உண்மை இதுதான்.. சிவகுமார் ஓபன் டாக்
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியினராக வலம் வருபவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சூர்யா - ஜோதிகா திருமணத்தை சிவகுமார் தடுக்க நினைத்தார் என்று அப்போதைய மீடியாக்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து பேசிய சிவகுமார், நான் நடித்த பல படங்களில் காதல் திருமணம் செய்வது போல் நடித்திருக்கிறேன். சில படங்களில் மகன் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பது போல நடித்து இருக்கிறேன்.
அப்படி இருக்கும் போது சொந்த மகன் காதல் திருமணத்திற்கு எப்படி தடுக்க நினைப்பேன். சூர்யா - ஜோதிகா காதலுக்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று சிவகுமார் கூறியுள்ளார்.