55 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் எஸ்.ஜே. சூர்யா.. மூன்று காதல் தோல்வியா
S J Surya
By Karthick Raja
தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான வில்லன் என்று சொன்னாலே அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வருபவர் எஸ்.ஜே. சூர்யா மட்டும் தான்.
இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட போது, தனது முன்னாள் காதலிகள் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், தனக்கு மூன்று காதல் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் 55 வயதாகும் எஸ்.ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவருடைய கவனம் முழுக்க தற்போது சினிமாவில் மேல் தான் வைத்துள்ளார். தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், அடுத்ததாக மீண்டும் இயக்குனர் அவதாரமும் எடுக்கவுள்ளாராம்.