எஸ்ஜே சூர்யா கடும்கோபத்திற்கு ஆளான தேனாண்டாள் பிலிம்ஸ்! 3 ஆண்டுகளாக ஏமாற்றும் நிலை?
தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்த சிலர் நடிப்பிலும் ஆர்வம் கொண்டு நடிப்பார்கள். அந்த வகையில் இயக்குநராக இருந்து பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் படங்களை இயக்காமல் நடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை வெளியாக நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.
சினிமாவில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த எஸ் ஜே சூர்யா மீண்டும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜுக்கு அவரது ரீஎன்ட்ரீயில் மிகப் பெரிய பங்கு உண்டு. இறைவி படத்தின் மூலம் நல்ல நடிகராக மறுபிறவி எடுத்த எஸ் ஜே சூர்யா அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார். செல்வராகவன் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த மூன்று வருடங்களாக கிடப்பில் கிடக்கும் மற்றொரு படத்திற்கும் விடிவு கிடைக்குமா என எஸ் ஜே சூர்யா மிகவும் மனம் நொந்துபோய் உள்ளாராம். டாப்ஸி நடித்த கேம் ஓவர் என்ற படத்தை இயக்கிய அஸ்வின் என்பவரின் இயக்கத்தில் இறவாகாலம் என்ற படம் உருவானது. அந்த படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பான நிலையில் தற்போது வரை அந்த படத்திற்கு விடை தெரியாமல் உள்ளனர் படக்குழுவினர்.
தன்னுடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இறவாகாலம் படம் தன்னுடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என உறுதியுடன் உள்ள எஸ் ஜே சூர்யா, தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இறவாகாலம் படத்தை பற்றி பேசி வருகிறாராம். விரைவில் இறவாகாலம் படம் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.