விஜய்க்கு அண்ணியா நடிக்கவே மாட்டேன்!! விடாப்பிடியாக இருந்து காரியத்தை சாதித்த நடிகை..

Vijay Sangeetha Sneha Venkat Prabhu Greatest of All Time
By Edward Sep 11, 2024 03:00 PM GMT
Report

டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் கோட் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப்படைத்து வரும் கோட் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார். இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை சினேகா பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய்க்கு அண்ணியா நடிக்கவே மாட்டேன்!! விடாப்பிடியாக இருந்து காரியத்தை சாதித்த நடிகை.. | Sneha Avoids Vijay Movie Chance Before Goat Reason

வசீகரா படத்திற்கு பின் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார் சினேகா. கோட் படத்திற்கு முன் விஜய்யின் ஒரு பெரிய படத்தில் அண்ணியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவிற்கு வந்துள்ளது. ஆனால் சினேகா நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதற்கான காரணம் என்ன என்று சமீபத்தில் சினேகா ஓப்பன் செய்திருக்கிறார்.

விஜய்யுடன் ஜோடியாக நடித்துவிட்டு அவருக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என அழைப்பு வந்தபோது அந்த படத்தை தேர்வு செய்யவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏதோ சரியா படல என்பதால் அந்த படத்தை நிராகரித்துவிட்டேன்.

விஜய்க்கு அண்ணியா நடிக்கவே மாட்டேன்!! விடாப்பிடியாக இருந்து காரியத்தை சாதித்த நடிகை.. | Sneha Avoids Vijay Movie Chance Before Goat Reason

இப்போது தளபதிக்கு ஜோடியாக நடித்தது பெருமையாக இருக்கு என்று சினேகா பேசியிருக்கிறார். வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்த நடிகை சங்கீதா ரோலில்தான் சினேகாவை நடிக்க அழைப்பு வந்ததா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.