ஒரே நாளில் 126 கோடி வசூலித்த கோட்!! நடிகை சினேகா செய்த செயல்..
Vijay
Sneha
Venkat Prabhu
Greatest of All Time
By Jai
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் வெளியான ஒரேநாளில் மட்டும் 126.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

கோட் படத்தில் நடிகை திரிஷா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் சிறப்பு ரோலில் நடித்துள்ளனர். மேலும் தோனியின் காட்சியும், அஜித்தின் மங்காத்தா படத்தின் BGMயும் இடம் பெற்றது.
கோட் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்கள் மத்தியில், அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகை சினேகா தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு மரக்கன்று கொடுத்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.


