திரிஷா, ஸ்ரீலீலா எல்லாம் ஓரமா போங்க!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை சினேகா..
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சினேகா.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார்.
சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வந்த சினேகா மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடித்திருந்தார்.
படங்களை தாண்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சினேகா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வந்தார்.
சமீபத்தில் நடந்த ஒரு எபிசோட்டில் போட்டியாளர் நாக்ராஜுடன் கிளாமராக ஆடியிருக்கிறார் நடிகை சினேகா. அவர்கள் ஆடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Trisha enbaargal.. Sreeleela enbaargal.. Punnagai arasi perumai theriyaadhor.. ?❤️pic.twitter.com/YTrdTcAcLa
— kay'ozhi? (@TheRedAlbatross) September 10, 2024