நடிகை சினேகாவா இது? இளம்நடிகையையே முஞ்சும் அளவிற்கு உடற்பயிற்சி.. வீடியோ..

prasanna sneha tamilactress
By Edward Sep 09, 2021 05:04 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களில் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. என்னவளே படத்தில் அறிமுகமாகி, மலையாளம், தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம்செய்து கொண்டு பிரசன்னா விஹான் என்ற ஆண் குழந்தையும் கடந்த ஆண்டு பெண் குழந்தையும் பெற்றார். பின் கதாநாயகியாக களமிரங்காமல் சிறப்பு கதாபாத்திரம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்போது உடல் எடையை முற்றிலுமாக குறைக்க உடற்பயிற்சி செய்து ஒல்லியாக மாறியுள்ளார். கடைசியாக நடிகர் தனுஷ் படத்தில் அவருக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இளம் நடிகைகளையே மிஞ்சிடுவாங்களோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.