15 வருட காதல் வாழ்க்கையில் விவாகரத்து வதந்தி!! பதிலடி கொடுத்து சினேகா - பிரசன்னா போட்ட ரொமான்ஸ் போட்டோஸ்..
தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் சினேகா - பிரசன்னா. புன்னகை அரசியாக கொடிக்கட்டி பறந்து வந்த சினேகா 2009ல் இருந்து பிரசன்னாவை காதலித்து 2012ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக சில ஆண்டுகள் கேஃப் விட்ட சினேகா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இடையில் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றியும் வருகிறார்.
கடந்த ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக 12 வருட திருமண வாழ்க்கையை முடித்து விவாகரத்து செய்யவுள்ளனர் என்ற செய்தி பரவியது. ஆனால் இதெல்லாம் பொய் என்று பிரச்சனாவும் சினேகாவும் புகைப்படங்கள் மூலமாக விளக்கம் கொடுத்தனர்.

அதன்பின் இருவரும் ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் தாங்கள் காதலித்து 15 வருடமாகியதை நேற்று காதலர் தினத்தன்று ரொமன்ஸ் செய்த புகைப்படங்களை சினேகா - பிரசன்னா வெளியிட்டுள்ளனர். இதற்கு பலர் வாழ்த்துக்களை கூறியும் ரசிகர்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.