பல நாள் கழித்து மனைவியை சந்தித்த சினேகன்! வனிதாவை வைத்து கேவளமாக விமர்சித்த நபர்..
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பணியாற்றி ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் கவிஞர் சினேகன். அதன்பின் பெரியளவில் வாய்ப்பு இல்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக சென்றார்.
மக்களின் ஆதரவை அந்நிகழ்ச்சி மூலம் பெற்ற சினேகன் இறுதி போட்டி வரை சென்றார். அதன்பின் படங்களில் வேலை செய்தும் கமல்ஹாசனிம் மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் பல ஆண்டுகளாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்தார்.
அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று நேற்று எலிமினேட்டாகி வெளியேறினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சினேகன் தன் மனைவி கன்னிகா மற்றும் பிக்பாஸ் வனிதா, தாடி பாலாஜி போன்றவர்களை சந்தித்து புகைப்படத்தையும் எடுத்து பதிவிட்டார்.
இப்புகைப்படத்தை பார்த்த ஒருசிலர் வனிதா சினேகன் நடுவில் இருக்கும் சினேகன் மனைவியை கன்னிகா உங்க பொண்ணா அக்கா என்று கிண்டல் செய்துள்ளனர்.