சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் விவாகரத்து!! 24 வருட திருமண வாழ்க்கையை உடைத்த தம்பி
சினிமாத்துறையில் சமீபகாலமாக விவாகரத்து செய்து பிரேக்கப் செய்தி அதிர்கரித்துவிட்டது. அப்படி கடந்த ஆண்டில் பல விவாகரத்து தென்னிந்திய சினிமாவிலும் நடைபெற்றுள்ளது.
சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் மகள் ஐஸ்வர்யா - தனுஷ் பிரிவதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் சல்மான் கானின் தம்பியும் நடிகருடமான சொஹைல் கான் - பேஷன் டிசைனர் சீமா கானும் 24 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
1998ல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு இரு மகன்களை பெற்று வளர்த்து வந்தனர். தற்போது சிமா என்ற பெயரை மட்டுமே வைத்து கான் என்பதை நீக்கிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சல்மான் கான் வீட்டில் விவாகரத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அர்பாஸ் கான் - மலைக்கா அரோரா தான் விவாகரத்து செய்து பிரிந்து அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார் அரோரா.