வீட்டில் ஆடை மாற்றிய சீரியல் நடிகை!! ஜன்னல் வழியே எட்டிபார்த்த நபர்..
Chennai
Tamil Actress
Actress
By Jai
சென்னையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஜன்னல் வழியே எட்டிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருகம்பாக்கத்தில் வசிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை, ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் உடை மாற்றி கொண்டிருக்கும்போது, ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப்பார்ப்பதை கண்டு அதிர்ச்சியாகியிருக்கிறார். இதனையடுத்து நடிகை போலிசில் புகாரளித்துள்ளார்.
விசாரணையில், நடிகையின் பக்கத்து விட்டில் வசிக்கும் பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அந்த ராணுவ வீரர் நடிகையை தவறான நோக்கத்தில் பார்த்ததாக புகார் அளித்ததை அடுத்து, அவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.