சாலமன் பாப்பையா காலமானார்..

Actors Death Tamil Actors Cinema News
By Jai Sep 11, 2026 08:35 AM GMT
Report

சாலமன் பாப்பையா

தன்னுடைய பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களை ஈர்த்தவர் தான் சாலமன் பாப்பையா.

பல பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்த சாலமன் பாப்பையா, பேராசிரியராகவும், தமிழ்த் தொண்டாற்றியும், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவர்.

சாலமன் பாப்பையா காலமானார்.. | Solomon Pappaiah Passed Away At 90

இந்நிலையில், சாலமன் பாப்பையா தன்னுடைய 90 வயதில் உயிரிழந்துள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ் பட்டிமன்றங்கலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா, உடல் நலக்குறைவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.