சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகங்கள்!! உணர்ச்சிவசப்பட்ட நடிகை சோனா...

Gossip Today Tamil Actors Tamil Actress Sona Heiden
By Jai May 28, 2026 05:15 AM GMT
Report

நடிகை சோனா

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்கி வெளியிடவுள்ளார். இந்த வெப் தொடரின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரபரப்பான ரகசிய தகவல்களை கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகங்கள்!! உணர்ச்சிவசப்பட்ட நடிகை சோனா... | Sona Controversy A Superstar Actor Betrayed Me

சமீபத்தில் சோனா அளித்த பேட்டியில், என்னுடைய வாழ்க்கையில் நிறைய பேர் துரோகம் செய்திருக்கிறார்கள். அந்த துரோகங்களை எல்லாம் நான் மூட்டை மூட்டையாக சுமந்து கொண்டிருக்கிறேன். நான் யாரிடமும் ரொம்ப சீக்கிரம் கனெக்ட் ஆகிவிடுவேன். ஆனால் முழுமையாக நம்பமாட்டேன்.

எப்போது ஒரு சந்தேகம் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஏன் அப்படி என்று எனக்கே தெரியாது. ஒருவேளை நான் வாழ்க்கையில் அவ்வளவு அடி வாங்கியதால் இருக்கலாம். பல இடங்களில் நான் ஏமாந்து இருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகங்கள்!! உணர்ச்சிவசப்பட்ட நடிகை சோனா... | Sona Controversy A Superstar Actor Betrayed Me

சூப்பர் ஸ்டார் நடிகர் 

ஒரு பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர் என் வாழ்க்கையில் நிறைய துரோகம் செய்திருக்கிறார். அவருடைய பெயரை சொல்ல விருப்பமில்லை. அவர் ஏற்கனவே பெரிய பிரபலம்தான்.

நான் பெயர் சொல்லி அவருக்கு இன்னும் பிரபலம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவரால் நான் பட்ட கஷ்டங்களும், மனவேதனைகளும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது என்று சோனா தெரிவித்துள்ளார். யார் அந்த பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் என்று பலரும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.