பிரேம்ஜியுடன் காதல்..எனக்காக தான் கல்யாணம் பண்ணலையா!! பல வருடன் ரசியத்தை உடைத்த சோனா...

Premji Amaren Sona Heiden
By Jai May 31, 2026 03:15 PM GMT
Report

நடிகை சோனா

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இரு சிசன்களாக உருவாகியுள்ள இந்த தொடரில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் 99 சதவீத உண்மையை மட்டுமே பதிவு செய்ததாக சோனா தெரிவித்தார்.

பிரேம்ஜியுடன் காதல்..எனக்காக தான் கல்யாணம் பண்ணலையா!! பல வருடன் ரசியத்தை உடைத்த சோனா... | Sona Finally Breaks Silence Love Rumours Premgi

இதனையடுத்து சோனா குறித்த பல செய்திகளுக்கு பேட்டிகளில் அவரே பதிலளித்து வந்தார்.

பிரேம்ஜி அமரனுடனான காதல்

இந்நிலையில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுடனான காதல், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் என பல வதந்திகள் பரவி வந்ததற்கும் தன்னுடைய பதிலை சமீபத்திய பேட்டியில் அளித்துள்ளார்.

பிரேம்ஜியுடன் காதல்..எனக்காக தான் கல்யாணம் பண்ணலையா!! பல வருடன் ரசியத்தை உடைத்த சோனா... | Sona Finally Breaks Silence Love Rumours Premgi

அதில், பிரேம்ஜியை வைத்து வந்த காதல் செய்திகள் எல்லாம் எனக்கு ரொம்பவும் சிரிப்பாக இருக்கும். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லலாம், தம்பி என்றும் சொல்லலாம், பெஸ்ட் பிரெண்ட் என்றும் சொல்லலாம், அந்தளவுக்கு எங்களுக்கு நல்ல நட்பு இருக்கிறது.

ஒரு கேங்குல எல்லாரும் குடித்து மட்டையாக இருந்தாலும் ஒருத்தன் மட்டும் தெளிவாக இருந்து அனைவரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்ப்பான். அந்த மாதிரி பொறுப்பான மனிதர் தான் பிரேம்ஜி.

பிரேம்ஜியுடன் காதல்..எனக்காக தான் கல்யாணம் பண்ணலையா!! பல வருடன் ரசியத்தை உடைத்த சோனா... | Sona Finally Breaks Silence Love Rumours Premgi

பிரேம்ஜி 40 வயது வரை எனக்காகத்தான் கல்யாணம் பண்ணவில்லை, என்னுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் அவர் கல்யாணம் செய்து கொண்டார் என்று சிலர் கதை கட்டினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை, அது முழுக்க முழுக்க வதந்தி.

தற்போது பிரேம்ஜி தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை சோனா.