'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல'.. 7 ஆண்டுகள் கோமாவில் இருந்த கணவர்.. மீட்டெடுத்த மனைவியின் உண்மையான காதல்..
சீனாவின் ஹெனான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாவோ. இவருக்கு சாங்மெய் என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், மிகப்பெரிய சோகம் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்தது. ஜாவோ வேலை செய்து வந்த ஒரு கிடங்கின் மேற்கூரையில் 3 வயது குழந்தை சிக்கி, உயிருக்கு போராடிய நிலையில், அந்த குழந்தையை அவர் துணிச்சலுடன் காப்பாற்றினார். குழந்தையை மார்போடு அணைத்தபடி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால் ஜாவோவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் கோமாவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும், மருத்துவர்களின் அறிவுரையின்படி, மசாஜ் செய்தும், கைகால் விரல்களை நீவிவிட்டு உணர்ச்சியை தூண்டியுள்ளார். கணவருக்கு கேட்காது என்று தெரிந்தும் கூட, அவர்கள் காதலித்த காலத்திலும், மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களிலும் பேசிக்கொண்ட விஷயங்களை தினமும் ஜாவோவின் காதுக்கு அருகில் சென்று பேசிக்கொண்டே இருந்துள்ளார் சாங்மெய். தொடர்ந்து இதுபோன்று ஒவ்வொரு நாளும் செய்து வந்துள்ளார்.

சாங்மெய்யின் ஐந்து ஆண்டுகால தொடர் போராட்டத்திற்கு பலனாக, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜாவோவின் உடலில் லேசான அசைவுகள் தெரிய தொடங்கியுள்ளன. அதை தொடர்ந்து அளிக்கப்பட்ட தீவிர மறுவாழ்வு பயிற்சிகளின் விளைவாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜாவோ கண்களை திறந்தார். அருகில் நின்ற மனைவியை பார்த்ததும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிய நிலையில், 'சாங், ஐ லவ் யூ' என கூறினார். 7 ஆண்டுகளுக்கு பின் கணவரின் வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை கேட்டு சாங்மெய் கண்ணீர் மல்க அவரை ஆரத்தழுவி கொண்டார்.

ஜாவோ இன்னும் பூரணமாக குணமடையவில்லை என்றாலும், பேசுவதை புரிந்துகொண்டு, கைகளை உயர்த்தி பதில் சைகை செய்கிறாராம். சிறிது நேரம் அவரால் எழுந்து நிற்கவும் முடிகிறது. இன்னும் சில மாதங்களில் அவர் முழுமையாக குணமடைந்து பழைய நிலைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.