பல ஆண்டுகளாக வாய்ப்பில்லை! இப்படியொரு முடிவெடுத்த இயக்குநரின் முன்னாள் மனைவி நடிகை..
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி கோவில், 7ஜி ரெய்ன்போ காலணி, புதுப்பேட்டை, மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். 90ஸ் கிட்ஸ்களின் கனவிக்கன்னியாகவும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
பின் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார். இதையடுத்து மார்க்கெட் குறைந்ததால் சில சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அதற்காக முற்றிலும் உடல் எடையை குறைத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சின்னத்திரையில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் நடந்து வருவதாக செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே பாண்டவர் இல்லம் சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் தற்போது சீரியலில் முழு கவனம் செலுத்தவுள்ளாராம் சோனியா அகர்வால்.