நிஜத்தில் ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்.. வெளிவந்த பல வருட ரகசியம்

Ravi Krishna Sonia Agarwal Tamil Cinema Selvaraghavan
By Dhiviyarajan Dec 22, 2023 07:26 AM GMT
Report

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ன் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியான7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை போலவே, இந்த படத்திலும் ஹீரோவாக ரவிகிருஷ்ணா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

நிஜத்தில் ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்.. வெளிவந்த பல வருட ரகசியம் | Sonia Agarwal Beat Ravi Krishna Badly

7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வாலின் மேல் ரவி கிருஷ்ணா கை வைத்துவிடுவார். இதனால், ஆத்திரம் அடைந்த சோனியா அகர்வால் கோபத்துடன் செருப்பை கழட்டி அடிப்பார்.

இந்த காட்சியை படமாக்கப்பட்ட போது, நிஜமாகவே ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடிக்க சொல்லி இருக்கிறார் செல்வராகவன். இந்த காட்சியை ஒரே டேக்கில் சோனியா அகர்வால் முடித்துவிட்டார். இல்லை என்றால் பல முறை செருப்பால் அடி வாங்கி இருப்பேன் என்று ரவி கிருஷ்ணா கூறியுள்ளார்.