மோகன் பாபுவுக்கும் என் மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நடிகை செளந்தர்யா கணவர் விளக்கம்..
செளந்தர்யா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை செளந்தர்யா. அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் நடிகை செளந்தர்யா. கடந்த 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி அவரது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூருவுக்கு செஸ்னா 180 என்ற விமானத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே செளந்தர்யா மரணமடைந்தார்.
இதுகுறித்து 21 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல கொலை. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் செளந்தர்யாவின் ஜல்பள்ளி கிராமத்தில் இருக்கும் நிலத்தை மோகன் பாபு கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் ஒரு நபர் புகாரளித்திருந்தார்.
இதுகுறித்து மறைந்த நடிகை செளந்தர்யாவின் கணவர் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
செளந்தர்யா கணவர்
ஹைதராபாத்தில் நிலம் ஒன்றை தொடர்புபடுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் மோகன் பாபு, செள்ந்தர்யா பற்றி போலியான தகவல்கள் உலா வருகிறது. மறைந்த என் மனைவி செளந்தர்யாவின் எந்த நிலத்தையும் மோகன் பாபு ஆக்கிரமிக்கவில்லை என்பதை நான் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்கிறேன். இதுதொடர்பாக எந்தவொரு பரிவர்த்தனையும் எங்களுக்கு இடையில் நடைபெறவில்லை.
எங்கள் குடும்பத்துக்கு மோகன் பாபு நல்ல நண்பர். இதுதொடர்பாக வரும் அனைத்து செய்திகளும் போலியானவை. என் மனைவி மரணத்திற்கும் மோகன் பாபுவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று செளந்தர்யாவின் கணவர் தெரிவித்துள்ளார்.