சான்ஸும் இல்ல, சக்சஸும் இல்ல!! சொகுசு வாழ்க்கை வாழ நடிகை எடுத்த முடிவு..
நடிகை
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நேரடியாகவே நடித்துவிட்டவர்தான் இந்த நடிகை. அதிலும் நடிகைக்கு தெலுங்கில் பெரியளவில் சக்சஸ் கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்து நடிகை கமிட்டான படம் சொதப்பியிருக்கிறது.
அதே நிலைமைதான் நடிகைக்கு அனைத்து மொழிகளிலும், தமிழில் எல்லாம் நடிகை நடித்த படங்கள் அனைத்தும் டாப் நடிகர்களுடன் தான். அதனால் படங்கள் கொஞ்சம் சக்சஸ் ஆனாலும், படத்தில் நடிகையின் போர்ஷன், வெறும் செட் பிராப்பர்டி போல் தான் இருந்துள்ளது.

இதனால் நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. தென்னிந்தியாவில் இப்படி என்றால் இந்தியில் முயற்சி செய்யக்கூடாது என்று இந்தியிலும் நடித்து புகழ் பெறலாம் என்று ஆசையோடு சென்றார். ஆனால் அவர் கமிட்டான முதல் படமே உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிக்க வைத்து, இந்த நடிகையிடம் இவ்வளவுதான் சரக்கு என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
வெப் தொடரில்
இதனால் நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் அப்செட் ஆன நடிகை தற்போது முழுக்க முழுக்க விளம்பரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

படங்களில் நடிப்பதைவிட வெப் தொடர்களில் கவனம் செலுத்தலாம் என்றும் வெப் தொடரில் அதிக கவனம் செலுத்தும்போது பான் இந்தியா அளவில் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்று நம்புகிறாராம்.
வெப் தொடரில் கமிட்டாவதால் வருடம் முழுவதும் பிஸியாக நடிக்கவும் முடியும் என்றும் எப்போதும் பிஸியான நடிகை என்று திரையுலகில் பேச்சு இருந்து கொண்டே இருக்கும் என்றும் இந்த முடிவை எடுத்துள்ளாராம். விஷயத்தை கேள்விப்பட்டவர்கள், திறமையான நடிகை, இன்னும் அவரது திறமை முழுவதுமாக வெளிவரவில்லையே என்று புலம்பி வருகிறார்கள்.