ஷூட்டிங்கில் தொடங்கிய ஸ்பார்க்!! பாலிவுட்டின் 6 ரகசிய காதல் கதைகள்..யார் யார்?

Aishwarya Rai Alia Bhatt Rashmika Mandanna Kiara Advani Deepika Padukone
By Edward Feb 27, 2026 05:30 AM GMT
Report

திரைத்துறையை சார்ந்த நடிகர் - நடிகைகள் தன்னுடன் நடிக்கும் சக கலைஞர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ரகசியமாக காதலித்து பின் திருமணம் செய்து கொள்வார்கள். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவை ரகசியமாக காதலித்து வந்த நிலையில், சைலெண்ட்டாக நேற்று பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணத்தையும் முடித்துள்ளனர்.

ஷூட்டிங்கில் தொடங்கிய ஸ்பார்க்!! பாலிவுட்டின் 6 ரகசிய காதல் கதைகள்..யார் யார்? | Spark On The Shooting Spot 6 Secret Love Stories

அந்தவகையில் பல பிரபல ஜோடிகளின் காதல் கதை படப்பிடிப்பு தளத்தில் தொடங்கி ரகசியம் காத்து பின் திருமணம் வரை சென்றுள்ளது. அப்படி யார் யார் ரகசிய காதல் கதையை வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்..

6 ரகசிய காதல் கதைகள்

இந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் காதல் கதை குரு படப்பிடிப்பில் தொடங்கியது. பின் இருவரும் 2007ல் திருமணம் செய்து ஆராத்யா என்ற மகளை பெற்றெடுத்தனர்.

ஷூட்டிங்கில் தொடங்கிய ஸ்பார்க்!! பாலிவுட்டின் 6 ரகசிய காதல் கதைகள்..யார் யார்? | Spark On The Shooting Spot 6 Secret Love Stories

பாலிவுட்டின் க்யூட் ஜோடியாக திகழ்ந்து வரும் ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா டிசோசா துஜே மேரி கசம் என்ற படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்தனர். பின் 9 ஆண்டுகள் டேட்டிங் செய்து 2012ல் திருமணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

ஷூட்டிங்கில் தொடங்கிய ஸ்பார்க்!! பாலிவுட்டின் 6 ரகசிய காதல் கதைகள்..யார் யார்? | Spark On The Shooting Spot 6 Secret Love Stories

பாலிவுட்டின் மாஸ் ஜோடியாக திகழ்ந்து வரும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இருவரும் ராம்-லீலா படத்தின் ஷூட்டிங்கில் காதலை தொடங்கினர். பின் பல வருட டேட்டிங்கிற்கு பின் 2018ல் திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தனர்.

ஷூட்டிங்கில் தொடங்கிய ஸ்பார்க்!! பாலிவுட்டின் 6 ரகசிய காதல் கதைகள்..யார் யார்? | Spark On The Shooting Spot 6 Secret Love Stories

சித்தார்த் மல்யோத்ரா - கியாரா அத்வானி இருவரும் ஷேர்ஷா படப்பிடிப்பில் காதலை தொடங்கி, 2023ல் திருமணம் செய்து கடந்த ஆண்டு ஒரு மகளை பெற்றெடுத்தனர்.

பாலிவுட்டின் ராயல் ஜோடியாக திகழ்ந்தவர்கள் தான் சைஃப் அலிகான் - கரீனா கபூர் ஜோடி. தஷன் படத்தின் ஷூட்டிங்கின் போது காதலை தொடங்கி பல ஆண்டுகள் டேட்டிங் செய்தப்பின் 2012ல் திருமணம் செய்து 2 மகன்களை பெற்றெடுத்தனர்.

ஷூட்டிங்கில் தொடங்கிய ஸ்பார்க்!! பாலிவுட்டின் 6 ரகசிய காதல் கதைகள்..யார் யார்? | Spark On The Shooting Spot 6 Secret Love Stories

சென்ஷேஷனல் ஜோடியாக திகழ்ந்து வரும் ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் பிரம்மாஸ்திரா படத்தின் ஷூட்டிங்கின் போது காதலித்து லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். பின் 2022ல் இருவரும் திருமணம் செய்து ராஹா என்ற மகளை பெற்றெடுத்தனர்.