23 வயது நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. ஜோடியாக நடந்த போட்டோஷூட்

Sivakarthikeyan Sudha Kongara Actress Sreeleela
By Kathick Aug 27, 2024 02:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அமரன், எஸ்.கே 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. சூர்யா நடிப்பதாக இருந்த புறநானுறு படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தில் சிவாவுடன் இணைந்து நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீலீலா

அதன்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக 23 வயது சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

23 வயது நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. ஜோடியாக நடந்த போட்டோஷூட் | Sreeleela Committed Sivakarthikeyan Sudha Movie

இவர்கள் இருவருக்குமான போட்டோஷூட் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார் என்றும் தகவல் கூறுகின்றனர். அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Gallery