முன்னணி ஹீரோவுடன் நடிக்க ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
Indian Actress
Actress
Sreeleela
By Kathick
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பராசக்தி படம் வெளிவந்தது. நடிப்பை தாண்டி ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
குறிப்பாக புஷ்பா 2 படத்தில் இவர் ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலீலா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் உஸ்தாத் பகத் சிங். இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முதல் முறையாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இந்த நிலையில், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க இவர் ரூ. 3 கோடி வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
