வீட்டை காலி செய்த நடிகை ஸ்ரீமன்.. காரணம் என்ன தெரியுமா..
Chennai
Actors
Tamil Actors
By Jai
சென்னை மழை
தமிழகத்தில் சில நாட்களாகவே அதிக மழை பெய்து வருவதால் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பாதித்து வருகிறார்கள். அதிலும் சென்னையில் தொடர் அதி கனமழையால் பெய்து வருகிறது.
இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் பல இடங்களிலும் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருக்கிறது. அதனால் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

ஸ்ரீமன்
அதில் தற்போது பாதிக்கப்பட்டு தன் வீட்டை காலி செய்திருக்கிறார் நடிகர் ஸ்ரீமன். கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் காலனியில் வசித்து வரும் ஸ்ரீமனின் வீட்டிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இன்னும் அதிக அளவில் மழைபெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும் நிலை ஏற்பட்டதால் அவரது வீட்டை காலி செய்துள்ளார் ஸ்ரீமன்.