சிம்புவால் பித்து பிடித்துபோன சீரியல் நடிகை? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை

Silambarasan Serials
1 வாரம் முன்
Edward

Edward

தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியாக 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி.

சிம்பு மீது அதீத காதல்

கனாகாணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். பின் யாரடி நீ மோகினி, புதுபுது அர்த்தங்கள் போன்ற சீரியல்களிலும் நடித்தார். இன்ஸ்டாகிராமில் வலிமை படத்தினை பற்றி விமர்சனம் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பின் பலர் தன்னை படுகேவளமாக திட்டி வருவதாகவும் கூறி பேட்டிகளையும் கொடுத்தார். இதன்பின் நடிகர் சிம்புவை தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன். எங்களை சேர்த்து வையுங்கள் என்று கூறி அழுதபடி ஒரு பதிவினையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த விசயம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அம்மாவே ஒதுக்கும் அளவிற்கு அவரின் சேர்க்கை சரியில்லாமல் போனது.

சிம்புவால் பித்து பிடித்துபோன சீரியல் நடிகை? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை | Sreenidhi Is In Hospital To Get Treatment

மன அழுத்தம்

மேலும் அவரது தோழியும் சீரியல் நடிகையுமான நட்சத்திராவின் உயிருக்கு அவரை கல்யாணம் செய்யப்போகும் நபரால் ஆபத்து என்றும் கூறி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தன் மகள் மன அழுத்ததில் இருப்பதாலும் சேரும் சேர்க்கை சரியில்லாததாலும் இப்படியாக நடந்து கொள்கிறார் என்று விளக்கம் அளித்திருந்தார்.

சிம்புவால் பித்து பிடித்துபோன சீரியல் நடிகை? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை | Sreenidhi Is In Hospital To Get Treatment

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் சிம்புவை நினைத்தும் பல விசயங்களை போட்டு குழம்பியும் இருந்த ஸ்ரீநிதி புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு சிறு ரிலாக்ஸ்சேஷனுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது நண்பர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.