நடிகையாகும் முன் அதை செய்திருக்கிறேன்!! வெளிப்படையாக பேசிய ஸ்ரீதேவி மகள் குஷி..

Sridevi Janhvi Kapoor Indian Actress Actress
By Jai Aug 26, 2024 11:30 AM GMT
Report

ஸ்ரீதேவியின் இரு மகள்கள்

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து 2018ல் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரு மகள்கள் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். தடக் என்ற படத்தின் மூலம் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி தற்போது தசாரா படத்தின் என் டி ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இரண்டாம் மகள் குஷி கபூர் நடிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நடிகையாகிவிட்டார். ஜோயா அக்தர் இயக்கத்தில் ஆர்ச்சீஸ் படம் மூலம் கதாநாயகியாகினார் குஷி கபூர். அப்படத்தின் நிகழ்ச்சிக்கு அம்மாவின் உடையில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.

நடிகையாகும் முன் அதை செய்திருக்கிறேன்!! வெளிப்படையாக பேசிய ஸ்ரீதேவி மகள் குஷி.. | Sridevis Daughter Khushi Kapoors Honesty About Lip

குஷி கபூர் லிப் ஃபில்டர்

12 வயது இருக்கும் போது பல்லில் பிரேஸ் அணிந்திருந்த குஷி கபூர், ஆர்ச்சீஸ் விழாவில் எடை குறைந்து வேறுமாதிரியான லுக்கில் இருப்பதாக பலர் கூறினர். குஷி வெளியிட்ட வீடியோவில் லிப் ஃபில்டர் செய்து கொண்டதாக கூறி கலாய்த்தனர்.

அதற்கு குஷி கபூர், லிப் ஃபில்லர்ஸ் மட்டும் அல்ல நோஸ் ஜாபும் செய்துள்ளேன் என பதிலடி கொடுத்திருக்கிறார்.. நடிகைகள் பெரும்பாலானோர், சர்ஜரி செய்ததை வெளியில் சொல்லமாட்டார்கள். ஆனால் குஷி கபூர் தான் என்னென்ன செய்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லியதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.