குடிபோதையில் குதூகல குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீதிவ்யா !! உண்மையில் நடந்தது இதுதான்..

Keerthy Suresh Sri Divya Gossip Today Tamil Actress
By Edward Feb 26, 2024 02:15 PM GMT
Report

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகினார் ஸ்ரீதிவ்யா. அப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, பெங்களூர் நாட்கள், ஈட்டி, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவை தொர போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

குடிபோதையில் குதூகல குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீதிவ்யா !! உண்மையில் நடந்தது இதுதான்.. | Sridivya Lost Chance House Party Actor Cheyyarbalu

இதனை தொடர்ந்து பிரபல நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேசத்தில், நடிகை ஸ்ரீதிவ்யா அதிக அளவில் மது அருந்தி மோசமாக ஆட்டம் போட்டதாகவும், அதன் பின் போதை தெளிந்த பின் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவந்தது. இதையடுத்து ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது விக்ரம் பிரபுவின் ரைட் படத்தின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

அந்த நடிகை தான் வேண்டும்.. ஆசையுடன் அடம் பிடித்த ரஜினிகாந்த்..

அந்த நடிகை தான் வேண்டும்.. ஆசையுடன் அடம் பிடித்த ரஜினிகாந்த்..

தற்போது நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை கொடுத்துள்ளார். ஏன் இந்த நடிகை காணாமல் போனார் என்று விசாரித்த போது இமான் அண்ணாச்சி வீட்டு கிரகபிரவேஷத்தில் பார்ட்டியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட வீடியோ வைரலானது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் எதுவுமே இந்த பூனை குடிக்காது என்று பார்த்தால் அவர் வீடியோ வைரலாகிவிட்டது. பணமும் புகழும் சேரும் போது என்ன பண்ணுவது என்று தெரியாது.

குடிபோதையில் குதூகல குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீதிவ்யா !! உண்மையில் நடந்தது இதுதான்.. | Sridivya Lost Chance House Party Actor Cheyyarbalu

அந்த சமயத்தில் புத்திசாலித்தனத்தையும் சுயக்கட்டும் ரொம்ப அவசியம். சினிமாவில் தான் எல்லாம் ஈசியாக கிடைக்கக்கூடிய ஒன்று. அப்படி நான் விசாரித்ததில், வளர்ந்து வந்தபோது ஒரு சதி வலையில் சிக்கியது தான் ஸ்ரீதிவ்யா. புகழின் உச்சியை தவிர, காசு ஒன்று வரும் போதும், அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகும் போது உங்களின் டிமேண்ட் அதிகமாகிறது. அப்போது சரியான அனுபவம் வாய்ந்தவர்களான மேனேஜர் அவர்களை காப்பாற்றுவார்கள். நடிகைகளுக்கே சுய கட்டுப்பாடு வேண்டும்.

வாங்க ஒரு கட்டிங் போடுங்க என்று சிலர் கேட்பார்கள். அதற்கெல்லாம் போகக்கூடாது என்று சரியாக இருக்க வேண்டும். அப்பவே நடிகைகள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற பெயர் இருந்தது. இப்ப இவர் பார்ட்டியில் கலந்து கொண்டது தான் ஒரு அசோசியேட் என்னிடம் வீடியோவை காமித்து இதான் நடந்தது என்று கூறினார் என்று செய்யாறு பாலு தெரிவித்தார்.

குடிபோதையில் குதூகல குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீதிவ்யா !! உண்மையில் நடந்தது இதுதான்.. | Sridivya Lost Chance House Party Actor Cheyyarbalu

அந்த சம்பவம் தான் ஸ்ரீதேவி காணாமல் போக காரணம். ஸ்ரீதிவ்யா அக்கா ஸ்ரீரம்யா விருது படத்தில் நடித்தார். ஆனால் கமர்ஷியல் படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இதற்கு இடையில் வந்து டாப் இடத்தினை பிடித்தார். கீர்த்தி சுரேஷால் தான் ஸ்ரீதிவ்யா மார்க்கெட் போய்விட்டது உண்மை தான். ஸ்ரீதிவ்யா விட்ட இடைவெளி தான் கீர்த்தி சுரேஷ் மேலே வர காரணம். ஒரேவொரு பார்ட்டி, ஒருவொரு கட்டிங் தான் ஸ்ரீதிவ்யாவை காலி செய்ய காரணம், இது தேவையா என்று செய்யாறு பாலு விளக்கம் கொடுத்திருக்கிறார்.