குணமடைய நேரம் எடுக்கும்..வலிகளும் இருக்கும்!! சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் தற்போதைய நிலை...
ஸ்ருதி ராஜ்
மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் 1996ல் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். இதனையடுத்து, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.

2008ல் இருந்து சினிமா வாய்ப்பில்லாமல் இருந்த ஸ்ருதி, தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். கிட்டத்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தென்றல் சீரியல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன்பின் ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த ஸ்ருதி தற்போது லட்சுமி என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு மாதமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த ஸ்ருதி ராஜ், அக்கிலிஸ் தசைநார் கிழிவு (Achilles Tendon Rupture) பிரச்சனையால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சமீபத்தில் தெரிவித்து வருகிறார்.