சீரியலில் இப்படியொரு காட்சியா!! திருமணமாகாத 42 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் சீரியல் நடிகர்!!
சினிமாவில் நடித்த நட்சத்திரங்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை சீரியலுக்கு தாவி விடுகிறார்கள். அப்படி அக்ரஜன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ்.
இப்படத்திர்கு பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் படத்தில் கதாநாயகியாகவும் க்ளாமர் காட்சிகளிலும் நடித்து பிரபலமானார். இதன்பின் 2008ல் இயக்கம் படத்திற்கு பிறகு வெள்ளித்திரைக்கு டாட்டா காண்பித்து சின்னத்திரையில் தென்றல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகினார்.

தென்றல் சீரியலால் 6 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார் ஸ்ருதி. திருமதி செல்வம், ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு, போன்ற சீரியல்கள் ஸ்ருதி கேரியரில் மிகமுக்கியமானதாக அமைந்தது.
இதன்பின் சன் தொலைக்காட்சி சீரியலான தாலாட்டு சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். சீரியலில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ராஜ் இணையத்தில் ஒரு ரொமாண்டிக் வீடியோவை பகிர்ந்துள்ளார். இப்படியொரு ரொமான்ஸ் வீடியோவை பார்த்து சீரியலில் இப்படியா செய்வது என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.