த்ரிஷா இல்லனா நயன்தாரா வா, இல்லை த்ரிஷா தான்.. பிரபலம் பேச்சால் கொந்தளிக்கும் ரசிகர்கள்
Nayanthara
Trisha
Thug Life
By Bhavya
த்ரிஷா
42 வயதை எட்டியும் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
இவர் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்நிலையில், இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் யூகி சேது பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "குந்தவை கதாபாத்திரம் பார்த்தேன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா இல்லை, த்ரிஷா இல்லைன்னா த்ரிஷா தான்.
அந்த குந்தவை வேற யாராவது நடிச்சாலும் அவர்களை ஓரமாக குந்தவை" என கூறியுள்ளார். இதை கேட்டு நயன்தாரா ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.