7.5 மணிநேர கேம் சேஞ்சர்!! இயக்குநர் சங்கரை அசிங்கப்படுத்தும் எடிட்டர்.. பிரபல காட்டம்
இயக்குநர் சங்கர் - ஷமீர் முகமது
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என கொண்டாடப்படும் இயக்குநராக திகழ்ந்து வருபவர் சங்கர். கடந்த சில ஆண்டுகளாக அவர் இயக்கிய படம் சரிவை சந்தித்தும் படுமோசமான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது.
படம் என்ன தான் தோல்வி படமாக இருந்தாலும் படத்தில் இருந்து வெளியேறியப்பின் எடிட்டர் ஷமீர் முகமது இப்படி பேசியிருக்கக்கூடாது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது சமீபத்திய எடிட்டர் ஷமீர் முகமது நரிவேட்டை பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய ஷமீர், கேம் சேஞ்சர் படத்தை 7.5 மணி நேரம் எடுத்து வைத்து 3 மணி நேரமாக சுருக்கி எடிட் செய்த பின் 2 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு குறைப்பட்ட நிலையில், படத்தின் சுவாரஸ்யம் ரொம்பவே அடி வாங்கிவிட்டதாக எடிட்டர் ஷமீர் முகமது இயக்குநர் சங்கர் பற்றி மோசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பத்திரிக்கையாளர் சுபைர்
அவர் பேசியது குறித்து பத்திரிக்கையாளர் சுபைர், ஒரு தொழில்நுட்பக் கலைஞர் தன் வெற்றி மூலமே பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, பிரபல இயக்குநரை இப்படி தனது அடுத்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இழிவுப்படுத்தும் வகையில் பேசியது எல்லாம் டிரெண்ட்டிங் மனநிலை என்றும் பல முன்னணி நடிகர்கள் படுதோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் இயக்குநர்கள் அவர்களுடன் இணைந்து பக்கபலமாக இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்து அந்த ஹீரோவை நம்பி படமெடுக்க பணம் போடுகிறார்கள். ஆனால் சங்கர் போன்ற இயக்குநர்களை இப்படி ஓரங்கட்டும் விதமாக பேசுவது தவறு என்றும் அவர் கூடிய விரைவில் தன்னுடைய கம்பேக்கை கச்சிதமாக கொடுப்பார் என்றும் பத்திரிக்கையாளர் சைபர் பேசியுள்ளார்.