நடிகை வாங்கி கொடுத்த துணியை எரிச்சாங்க..ஜோதிகாவின் உண்மை முகத்தை உடைத்த பாடகி..

Suriya Jyothika Gossip Today Suchitra Kanguva
By Edward Nov 21, 2024 05:30 AM GMT
Report

கங்குவா - ஜோதிகா

நடிகர் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வரும் படம் தான் கங்குவா. நெகட்டிவ் விமர்சனத்தை கண்டித்து ஜோதிகா அறிக்கை வெளியிட்டதில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

நடிகை வாங்கி கொடுத்த துணியை எரிச்சாங்க..ஜோதிகாவின் உண்மை முகத்தை உடைத்த பாடகி.. | Suchithra Bold About Jyothika Suriya Kanguva Issue

அதில் பாடகி சுசித்ரா, சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜோதிகாவை கண்டபடி பேசியிருக்கிறார். ஜோதிகா இப்படி செய்வதற்கு எல்லாமே சூர்யா தான் காரணம். ஜோதிகா பேச்சைக் கேட்டுகொண்டு தான் அனைத்தையும் செய்கிறார்.

பாடகி சுசித்ரா

அவரை பாலிவுட்டில் பெரிய ஆளாக்குகிறேன் என்று தலை முடியை ஸ்னைட்டினிங் செய்து மேக்கப் போட வைத்து சூர்யாவை பாடாய் படுத்துகிறார். சூரியாவிற்கு இப்போது 50 வயதாகிறது, இப்போது போய் பாலிவுட்டில் ஆடிஷன் போக வேண்டுமா? சூர்யாவிற்கு எதற்கு பாலிவுட், ஜோதிகாவிற்கு 4 படம் இருக்கிறது.

நடிகை வாங்கி கொடுத்த துணியை எரிச்சாங்க..ஜோதிகாவின் உண்மை முகத்தை உடைத்த பாடகி.. | Suchithra Bold About Jyothika Suriya Kanguva Issue

ஆனால் சூர்யாவுக்கு பாலிவுட்டில் ஒரு படம்கூட இல்லை. குழந்தைகள் படிப்புக்கு மும்பை போனோம் என்று ஜோதிகா சொன்ன பொய்யை நம்பி சூர்யாவும் அதையே சொன்னாரு. தமிழ்நாட்டில் இல்லாத படிப்பா, மும்பையில் இருக்கு, துபாய், சிங்கப்பூர் போகிறோம் என்று சொல்லி இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் படிப்பதற்கு மும்பைக்கு போனோம்னு சொல்றது எல்லாம் ஏத்துக்க முடியாது.

நடிகை வாங்கி கொடுத்த துணியை எரிச்சாங்க..ஜோதிகாவின் உண்மை முகத்தை உடைத்த பாடகி.. | Suchithra Bold About Jyothika Suriya Kanguva Issue

தமன்னா வாங்கி கொடுத்த துணி

உண்மையில் சூர்யா ஒரு பாவப்பட்ட மனுஷன், ஜோதிகா நிஜத்தில் சந்திரமுகி மாதிரி இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவொரு நடிகையும் பிராண்ட் கிடையாது. அவங்க எல்லார் கிட்டையும் அப்படித்தான் திமிரா பேசுவாங்க. அதுக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

அயன் படத்தில் தமன்னாவும் சூர்யாவும் நடிச்சிட்டு இருந்தாங்க, அப்போது, தமன்னா வெளிநாட்டில் இருந்து ஜோதிகா கிட்ட போனில் பேசியபோது நான் பசங்களுக்காக ட்ரெஸ் வாங்கி இருக்கிறேன், நான் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னாங்க.

நடிகை வாங்கி கொடுத்த துணியை எரிச்சாங்க..ஜோதிகாவின் உண்மை முகத்தை உடைத்த பாடகி.. | Suchithra Bold About Jyothika Suriya Kanguva Issue

அப்போது ஜோதிகா ஓ, சூப்பர், அனுப்புங்க என்று சொன்னாங்க. ஊர்ல இருந்து சூர்யா அந்த ட்ரெஸ் கொண்டுவந்து கொடுத்ததும், அதை எடுத்துட்டு போய் கொளுத்திட்டாங்க, இப்படிப்பட்ட கேரக்டர் தான் ஜோதிகா என்று பேட்டியில் பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார்.