தனுஷை கோழி அமுக்குறமாதிரி அமுக்கிய ஐஸ்வர்யா!! சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா...

Dhanush Aishwarya Rajinikanth Gossip Today Suchitra
By Edward Sep 12, 2024 02:30 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களை பற்றி சமீபகாலமாக சர்ச்சையாக பேசி வரும் பாடகி சுசித்ரா, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து பேசியிருக்கிறார்.

அதில் தனுஷ் எனக்கு நெருங்கிய நண்பர். கார்த்திக்கை திருமணம் செய்து கொள்வதற்கு முன் தனுஷை எனக்கு தெரியும். ஒரு நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், சிறந்த நடிகர் அவர். ராயன் படத்தில் எல்லாம் எவ்வளவு பவராக இருந்தார் தெரியுமா.

நான் அவரை நிறையமுறை உரிமை எடுத்து திட்டியிருக்கிறேன். காதல் கொண்டேன் சமயத்தில் ஐஸ்வர்யா தனுஷுக்கு பொக்கே அனுப்பியதை ரஜினி மகள் எனக்கு பொக்கே அனுப்பியிருக்கிறார் என்னிடம் வந்து கூறினார்.

தனுஷை கோழி அமுக்குறமாதிரி அமுக்கிய ஐஸ்வர்யா!! சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா... | Suchitra Controversy Speech Dhanush Aishwarya

எனக்கு பிடித்திருக்கிறது, திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைப்பதாகவும் தனுஷ் என்னிடம் கூறினார். நானோ. லூசா நீ இதெல்லாம் அமிதாப் பச்சன் காலங்காலமாக செய்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகர்களை கோழி அமுக்குற மாதிரித்தான் இது.

திருமணம் எல்லாம்செய்து கொள்ளாதே என்று சொன்னேன். ஆனால் அவரோ ரஜினி பொக்கே அனுப்பி இருந்தால் நீ சொல்வது சரி, அவர் மகள் தானே அனுப்பி இருக்கிறார் என்று என்னிடம் கூறினார் தனுஷ். இல்லை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று நான் கூறினேன் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.