கண்டுக்கொள்ளாத விஜய்..ரகசிய மீட்டிங்கில் அஜித் மனைவி ஷாலினி - சங்கீதா விஜய்..

Ajith Kumar Vijay Shalini Sangeetha Vijay jason sanjay
By Edward Nov 07, 2024 09:45 AM GMT
Report

விஜய் - சங்கீதா

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அதற்கான உண்மை நிலவரம் என்ன என்பது உறுதியாக இன்னும் தெரியவில்லை. விஜய் உடனான பிரச்சனை காரணமாகத்தான் சங்கீதா சென்னை பக்கம் வருவதே இல்லை என்று கூறப்பட்டது.

கண்டுக்கொள்ளாத விஜய்..ரகசிய மீட்டிங்கில் அஜித் மனைவி ஷாலினி - சங்கீதா விஜய்.. | Sudden Meeting Of Shalini Ajith Sangeetha Vijay

அதில் முரசொலி செல்வத்தின் அஞ்சலிக்கு வந்த சங்கீதா, விஜய்யின் தவெக மாநாட்டிற்கு வராதது இன்னும் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு மேல் இருவரும் எந்த நிகழ்வுகளிலும் காணப்பாடாமல் இருப்பதும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இதற்கிடையின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகுவதே அறிவிப்பு பின் தான் விஜய்க்கே தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

கண்டுக்கொள்ளாத விஜய்..ரகசிய மீட்டிங்கில் அஜித் மனைவி ஷாலினி - சங்கீதா விஜய்.. | Sudden Meeting Of Shalini Ajith Sangeetha Vijay

மகன் ஜேசன் சினிமாத்துறையில் ஆர்வம் காட்டி வந்தாலும், விஜய் அதைப்பற்றி துளிக்கூட கவலைப்படாமலும் கண்டுக்கொள்ளாமலும் இருந்து வருகிறார். அம்மா சங்கீதா தான் மகன் ஆசையை நிறைவேற்றியிருக்கிறாராம்.

ஷாலினி - சங்கீதா

இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தான் லைக்கா நிறுவனத்திடம் சிபாரிசு கேட்டுள்ளாராம். சங்கீதாவும் ஷாலினியின் பல ஆண்டு தோழிகளாக இருந்து வருவதால், ஷாலினி சிபாரிசு செய்துள்ளார்.

கண்டுக்கொள்ளாத விஜய்..ரகசிய மீட்டிங்கில் அஜித் மனைவி ஷாலினி - சங்கீதா விஜய்.. | Sudden Meeting Of Shalini Ajith Sangeetha Vijay

மேலும் ஜேசனின் செய்தி தொடர்பாளராக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான் இருந்து வருகிறாராம். அதையும் ஷாலினி பரிந்துரையில் தான் நடந்துள்ளதாம்.

தற்போது ஷாலினியும் சங்கீதாவும் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நட்புரீதியாக இருவரும் சந்தித்து பேசிக்கொண்டார்களா? இல்லை வேறு ஏதாவது விசயமா என்ற தகவல் வெளியாகவில்லை. இவர்களின் நட்பை அஜித் - விஜய் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டுக்கொள்ளாத விஜய்..ரகசிய மீட்டிங்கில் அஜித் மனைவி ஷாலினி - சங்கீதா விஜய்.. | Sudden Meeting Of Shalini Ajith Sangeetha Vijay