80களில் கொடிக்கட்டி பறந்த சுகன்யா! உண்மையை உடைத்து வீடியோ வெளியீடு..

divorce sukanya tamilactress
By Edward Jul 29, 2021 08:00 AM GMT
Edward

Edward

Report

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். சுகன்யாவுக்கு 52 வயதை எட்டியுள்ள நிலையில், சுகன்யாவின் திருமண வாழ்க்கை எதற்காக பிரிந்தது என்பது குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சீரியலிலும் சினிமாவிலும் அவர் இரவு பகல் பாராமல் நடித்து வந்துள்ளார். 2002 ல் ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்த சுகன்யா ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்று சில கிசுகிசுக்கள் ஓடிக்கொண்டிருந்தது அந்த நேரத்தில்.விவாகரத்திற்கு பின், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது குழந்தைகள் கூட இல்லாமல் தனிமையில் இருந்து வருகிறார் நடிகை சுகன்யா. இதையடுத்து படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் இளம் வயதில் இருப்பதை போன்று இருக்கும் சுகன்யா தன்னுடைய பிறந்த நாள் பற்றிய விவரத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தன் பிறந்த நாள் தவறான தேதியில் வாழ்த்துக்கள் கூறி வருவதாகவும், உண்மையான பிறந்த நாள் 25 நவம்பர் என்று கூறியுள்ளார்.