அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் நாசமாகிய வாழ்க்கை!! இரண்டாம் திருமண ரகசியத்தை உடைத்த நடிகை சுகன்யா
தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.
விவாகரத்து
கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டியில், பெண்கள் எதற்கும் பயந்து ஓடத்தேவையில்லை என்றும் கணவர் மனைவி இருவரும் கலந்து பேசி பின் விவாகரத்து செய்யலாம். அப்படியில்லை என்றால் நீதிமன்றம் சென்றும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். விவாகரத்து பெற தயக்கப்பட்டால் கொடுமையான காலங்களை குடும்பவாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
அரசியல்வாதியின் கட்டுபாட்டில்
பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று நடிகை சுகன்யா தெரிவித்திருந்தார். அதேபோல் ஒரு அரசியல்வாதியின் கட்டுபாட்டில் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் அவரால் தான் பாதி வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இரண்டாம் திருமணம்
இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்யப்போவது குறித்த கேள்விக்கும் பதில் அளித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்றும் தனக்கு 50 வயதாகி இருப்பதால் இனி கல்யாணம் குழந்தை வந்தால், அந்த குழந்தை என்னை அம்மா அல்லது பாட்டின்னு கூப்பிடுமே என்று நானே யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மறுமணம் வேண்டும் அல்லது வேணாம் என்று நான் கூறவில்லை என பதிலளித்திருக்கிறார் நடிகை சுகன்யா.