மாலத்தீவில் ஜாலி பண்ணும் தனுஷ், சிம்பு பட நடிகை சிந்து துலானி..புகைப்படங்கள்..
சிந்து துலானி
சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒருசில படங்களில் நடித்து டாப் நடிகையாக ஜொலிப்பார்கள். அப்படி இந்தி, தெலுங்கு மொழிப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2004ல் வெளியான சுள்ளான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை சிந்து துலானி.

இப்படத்தினை தொடர்ந்து சிம்புவின் சுள்ளான் படத்திலும் நடித்து பிரபலமானார். தமிழில் அறிமுகமானபோது ஒரே நேரத்தில் தனுஷ், சிம்பு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
இதன்பின் ஒருசில தமிழ் படங்களில் நடித்த சிந்து, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக தமிழில் சுந்தர் சி நடித்த முரட்டுக்காளை படத்தில் நடித்திருந்தார். தற்போது, 42 வயதாகும் சிந்து துலானி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
புகைப்படங்கள்
தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள சிந்து துலானி, அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.





