டாப் குக்கு டூப் குக் டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. பரிசுத் தொகை இத்தனை லட்சமா..
Sun TV
By Karthick Raja
சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் களமிறங்கினார்.
மேலும் அதிர்ச்சி அருண், மோனிஷா, ஜி.பி. முத்து, தீபா, பரத், தீனா ஆகியோர் டூப் குக் ஆக என்ட்ரி கொடுத்தனர். முதல் இரண்டு எபிசோட்களில் வைகைப்புயல் வடிவேலுவின் என்ட்ரி நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றது.

இந்த நிலையில் வெற்றிகரமாக பல எபிசோட்களை கடந்து வந்த டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியின் பைனல் போட்டி இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதில் நரேந்திர பிரசாத் மற்றும் நடிகை சுஜாதா ஆகியோர் டைட்டிலை வென்று ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையை தட்டி சென்றுள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
