அந்த இடத்தில் நான் சர்ஜரி பண்ணேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சுனைனா. தெலுங்கு படங்களில் அறிமுகமாகி குடும்ப பாங்கான நடிகையாக தமிழிலும் நடித்து வந்தார்.
அவர் நடிப்பில் பல படங்கள் நல்ல வரவேற்பை அவருக்கு கொடுத்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்தும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெறமுடியாத வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.
நடிகை சுனைனா அறிமுகமாகிய போது சுனைனா மூக்கில் சர்ஜரி செய்த செய்தி வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னைப்பற்றிய காமெடியான வதந்தி என்ன என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் நான் லண்டன் சென்று மூக்கில் சர்ஜரி செய்தேன் என்ற செய்தி வெளியானது. அது குறித்து பலர் என்னிடம் மூக்கில் எதாவது பண்ணீங்களா? மூக்கு மாறிவிட்டதே என்று கேட்டனர். ஆனால் அப்படி ஒன்றும் நான் செய்யவில்லை என்று கூறிவிட்டேன் என்று நடிகை சுனைனா கூறியுள்ளார்.
